உழவியந்திரத்தை மோதித் தள்ளியது, யாழ்தேவி கடுகதி தொடருந்து.
இந்தச் சம்பவம் சற்றுமுன்னர் கிளிநொச்சி உமையாள் புரம் பகுதியில் நடந்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த கடுகதி தொடருந்தே இவ்வாறு மோதித் தள்ளியது.
விபத்தில் உழவு இயந்திரம் சேதமடைந்தது. சாரதி எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பியுள்ளார்
அறிவியல் நகர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் கழிவு அகற்றலை மேற்கொண்டு வரும் உழவு இயந்திரம் கழிவுகளை கொட்டிவிட்டு திரும்பிச் செல்லும் போது விபத்துக்குள்ளானது எனத் தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment