தாய்மொழி மலையாளமாக இருந்தாலும் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர் அனு இம்மானுவல். பள்ளியில் படிக்கும் போதே மலையாளத்தில் 2011ல் வெளிவந்த 'ஸ்வப்ன சஞ்சாரி' படத்தில் நடித்தார். பின்னர் அமெரிக்காவிற்குத் திரும்பிச் சென்று பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, 2016ல் 'ஆக்ஷன் ஹீரோ பைஜு' படத்தில் நாயகியாக நடித்தார்.
தெலுங்கில் 2016ல் வெளிவந்த 'மஜ்னு' படத்தில் நாயகியாக அறிமுகமானார். பின்னர் 'ஆக்சிஜன், அஞ்ஞாதவாசி, நா பேரு சூர்யா, ஷைலஜா ரெட்டி அல்லுடு' ஆகிய படங்களில் நடித்தார்.
தமிழில் 2017ல் வெளிவந்த 'துப்பறிவாளன்' படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். ஆனால், அந்தப் படத்தில் அவருக்கு நாயகி என்று சொல்லுமளவிற்கு பெரிய முக்கியத்துவமில்லை.
சுமார் இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இப்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படம் மூலம் தமிழில் வளரலாம் என அனு நினைத்திருக்கிறாராம். அனுவின் ஆசை நிறைவேறினால் சரி.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment