பிரபல நீச்சல் வீரர் சாவு பல கோணங்களில் சந்தேகம்

பிரபல நீச்சல் வீரர் பாலகிருஷ்ணன் பாரவூர்தியில் மோதி உயிரிழந்த சம்பவம் ங்களை எழுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில், சென்னை ஷெனாய்நகர் ஜெயலட்சுமி காலனியைச் சேர்ந்தவர் டாக்டர் பத்ரிநாத். இவரது மகனான  பாலகிருஷ்ணன் தேசிய மற்றும் மாநில அளவிலான நீச்சல் போட்டிகளில் தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். 

தற்போது அமெரிக்காவில் என்ஜினியராக பணிபுரிந்து வந்த குறித்த நீச்சல் வீரர்  கடந்த சில தினங்களுக்கு முன் விடுமுறைக்காக சென்னைக்கு வந்துள்ளார். 

இந்த நிலையில் நேற்று இரவு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது  சீமெந்து கலக்கும் பாரவூர்தியில் மோதி பின்பக்க சக்கரத்தில் மாட்டிக் கொண்ட அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாலகிருஷ்ணன் கடந்த 2010 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் தேர்வாகியிருந்தார். காமன்வெல்த் போட்டியில் அவர் பங்கேற்கக்கூடாது என அவரை அப்போது சிலர் தாக்கியதாகவும் அதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் அப்போது பரபரப்புக் குற்றச்சாட்டு எழுந்தது. 

இந்த நிலையில் நேற்று விபத்தில் பாலகிருஷ்ணன் மரணமடைந்துள்ளது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்தனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment