அம்பாறை சம்மாந்துறை மல்கம்பிட்டி பகுதியில், ஒருதொகை ஆயுதங்கள் இன்றையதினம் மீட்கப்பட்டுள்ளன.
இராணுவத்தினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே வீடொன்றிலிருந்து இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு சிறிய கைத்துப்பாக்கிகள், வெற்றுத் தோட்டாக்கள்,வயர், இராணுவ சீருடை மற்றும் வெடிபொருள்கள் தயாரிக்கப் பயன்படும் இரசாயனங்கள், யூரியா என்பன குறித்த வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment