பாகிஸ்தானுக்குப் போ எனக் கூறி முஸ்லிம் இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். என்ற தகவலொன்று வெளியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் இந்தியாவின் பீகாரின் பெஹுசாராய் ((Begusarai)) மாவட்டத்தில் நடந்துள்ளது.
முகமது காசிம் என்ற விற்பனைப் பிரதிநிதி, கும்பி என்ற கிராமத்திற்கு சலவைத் தூள் விற்பனைக்காகச் சென்றுள்ளார். அவரை வழிமறித்து ராஜீவ் யாதவ் என்ற நபர் பெயர் என்ன என்று கேட்டுள்ளார்.
பெயரைக் கூறியுவடன், பாகிஸ்தானுக்கு போ எனக் கூறி அந்த நபர் முகமது காசிமை துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தை விளக்கி முகமது காசிம் வெளியிட்டுள்ள வீடியோ, சமூக வலைத் தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
இதேபோல டெல்லி அருகே குர்கானில் பள்ளிவாசலுக்கு சென்றுவிட்டுத் திரும்பிய முகமது பரக்கத் ஆலம் என்ற இளைஞரை, குல்லாவை கழற்றிவிட்டு ஜெய்ஸ்ரீராம் கூறுமாறு சிலர் மிரட்டியுள்ளனர்.
அவர் மறுத்தபோது, குல்லாவை தட்டிவிட்டு, அவரது ஆடையை கிழித்து அடித்து உதைத்துள்ளனர். இந்த இரு சம்பவங்களிலும் பொலிஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. என்றும் தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment