அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கான திகதி இன்று அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போதே இதனை அறிவிக்கவுள்ளதாக சபாநாயகர் கருஜயசூரிய நேற்று சபையில் தெரிவித்திருந்தார்.
அதற்கமைய இன்று முற்பகல் 9.30மணிக்கு நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பாக அறிவிக்கப்படவுள்ளது.
அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதத்திற்கான திகதியை நிர்ணயம் செய்வது குறித்து நேற்று நாடாளுமன்றில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
இதனையடுத்து குறித்த பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கான திகதியை இன்று இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் ஆராய்ந்து அறிவிப்பதாக சபாநாயகர் சபையில் அறிவித்தார்.
எனினும் இதையடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து சபை நடவடிக்கைகளை இன்று முற்பகல் 10.30வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
கடந்த மாதம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக்குண்டு தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட ஒருவரை விடுவிக்குமாறு கோரியமை உள்ளிட்ட 10 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அமைச்சர் ரிஷாட்டிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment