எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவிற்கான குண்டுதுளைக்காத வாகனத்தை வாங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதலுக்காக கோரிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ளார்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையிலேயே பிரதமர் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.
இருப்பினும் இந்த விடயத்திற்கு நிதியமைச்சர் மங்கள சமரவீர வித்தியாசமான கருத்துக்களை கொண்டிருந்தமையினால் பிரதமரினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பாத்திரம் அடுத்த வாரத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது.
தற்போதைய சூழ்நிலையில் அத்தகைய ஆடம்பர வாகனங்களை வாங்குவைத்தால் மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயம் ஏற்படும் என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், மற்றய அமைச்சர்கள் இந்த முன்மொழிவு தொடர்பாக மறுப்பு தெரிவிக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment