பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை மீண்டும் மக்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளமைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை பெற்றுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணமுள்ளன.
இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரி தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவுடனான ஆக்கபூர்வமான உறவை தொடர்ந்து எதிர்பார்ப்பதாகவும் அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பிரதமர் மோடியின் வெற்றி அவர் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் தெளிவான வெளிப்பாடு என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பிரதமர் ரணில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் இந்திய பிரதமருக்கு டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான உங்கள் பயணம் தொடரட்டும் என அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment