2019ஆம் ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தத்திற்கு அமைவான விண்ணப்பப்படிவங்களை வீடுகளுக்கு விநியோகிக்கும் பணிகள் ஆரம்பமாகவுள்ளன.
அதன்படி எதிர்வரும் 15ஆம் திகதி முதல் இந்த பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய கிராம சேவகர்கள் ஊடாக இந்த விண்ணப்பப்படிவங்களை கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
அத்தோடு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை ஜூன் மாதம் 2ஆம் திகதி முதல் மீளப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுகின்றது.
இதேவேளை வாக்காளர் ஒருவரின் பெயர் கடந்த ஆண்டு இடம்பெற்றிருந்த காரணத்தினால், அடுத்த ஆண்டிலும் அவரின் பெயர் அந்தப் பட்டியலில் உள்ளடக்கப்படமாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, 2019ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலில் தமது பெயர்களை உள்ளடக்குவதற்காக, வாக்காளர்கள் குறித்த விண்ணப்பப்படிவத்தை பூர்த்திசெய்து கிராம சேவகரிடம் கையளிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment