ரிஷாத், அசாத் சாலிக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை - சுசில்

நீதித்­து­றைக்கு அவ­ம­திப்­பினை ஏற்­ப­டுத்தும் வித­மாக கருத்­து­ரைத்த மேல்­மா­காண சபை ஆளுநர் அசாத் சாலி மற்றும் அமைச்சர் ரிஷாத் பதி­யூதீன் உள்­ளிட்­ட­வர்கள் தொடர்பில் நீதித்­து­றை­சார்ந்த அமைச்சர் ஏன் இது­வ­ரையில் எவ்­வித நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுக்­க­வில்லை என்று எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுசில் பிரே­ம­ஜ­யந்த கேள்­வி­யெ­ழுப்­பினார்.
இன்று சட்­ட­வாட்சிக் கோட்­பாடு நடை­மு­றையில் செயற்­ப­டு­கின்­றதா என்ற சந்­தேகம் காணப்­ப­டு­கின்­றது. அர­சாங்­கத்தின் இய­லா­மை­யினை மறைப்­ப­தற்கு சட்­டத்தின் மீது பழி சுமத்­தப்­ப­டு­கின்­றது என்றும் அவர் குறிப்­பிட்டார்.
எதிர்க்­கட்சி தலைவர் அலு­வ­ல­கத்தில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்­து­ரைக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,
பயங்­க­ர­வாத அமைப்­புக்­க­ளுடன் நீதி­ப­தி­க­ளுக்கும் தொடர்­புண்டு என மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி பகி­ரங்­க­மாக தெரி­வித்­துள்ள கருத்து நீதித்­து­றை­யினை அவ­ம­திப்­ப­தா­கவே காணப்­ப­டு­கின்­றது. நீதி­ப­தி­க­ளுக்கு அவப்­பெ­ய­ரினை ஏற்­ப­டுத்தும் வித­மாக கருத்­து­ரைத்­துள்­ளமை சட்­டத்­தின் பிர­காரம் தண்­ட­னைக்­குட்­ப­டுத்­தப்­பட வேண்டும். ஆனால் இவ­ரது கருத்­துக்கு எதி­ராக நீதி­ய­மைச்சர் தலதா அத்துக்­கோ­ரல வெறும் மறுப்பு மாத்­தி­ரமே தெரி­வித்தார். மாறாக அர­சி­ய­ல­மைப்பில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­மைக்கு அமைய எவ்வித சட்ட நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்­ள­வில்லை.
அவ­ச­ர­கால சட்டம் நடை­மு­றையில் இருக்கும் போதும் கூட அர­சி­யல்­வா­தி­களின் தலை­யீடு அனைத்து செயற்­பா­டு­க­ளிலும் காணப்­பட்­டுள்­ளன. தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டை­ய­வர்­க­ளாக சந்­தே­கத்தின் கைது செய்­யப்­பட்­ட­வர்­களை விடு­தலை செய்­யு­மாறு இரா­ணுவ தள­ப­திக்கு அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் கோரிக்கை விடுத்­த­தாக குறிப்­பிட்­ட­மையின் பின்­னணி என்ன? நெருக்­கடி காலத்தில் கூட பொறுப்பு வாய்ந்­த­வர்­களின் கட­மை­க­ளுக்கு விளை­வு­களை ஏற்­ப­டுத்­தி­ய­மையும் தண்­ட­னைக்­கு­ரிய செயற்­பா­டாகும். இவ்­வி­டயம் தொடர்­பிலும் நீதி­ய­மைச்சர் எவ்­வித நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுக்­க­வில்லை.
வெல்­லம்­பிட்டி செப்பு தொழிற்­சா­லையில் இருந்து கைது செய்­யப்­பட்­ட­வர்கள் விடு­தலை செய்­யப்­பட்­ட­மையின் பின்­ன­ணியில் நிச்­சயம் அர­சியல் தலை­யீடு காணப்­ப­டு­கின்­றது. அவ­ச­ர­கால சட்டம் நடை­மு­றையில் இருக்கும்போது பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் இவர்கள் கைது செய்­யப்­ப­டாமல் சாதா­ரண சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்­றத்தின் ஊடாக விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ளார்கள். இவ்­வி­ட­யத்தில் நீதி­மன்­றத்­திற்கும் தவ­றான விட­யங்­களே முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இவ்­வி­டயம் தொடர்பில் ஏன் நீதி­ய­மைச்சர் சட்ட நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­க­வில்லை. இன்று சாதா­ரண மக்­க­ளுக்கு மாத்­தி­ரமே சட்டம் முறை­யாக செயற்­ப­டு­கின்­றதா என்ற சந்­தேகம் எழு­கின்­றது. பெய­ர­ள விலே சட்­ட­வாட்சிக் கோட்­பாடு செயற்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது.
அர­சாங்கம் ஒரு தரப்­பி­ன­ருக்கு எதி­ராக ஆரம்­பத்தில் இருந்து கொண்டு வர முனை­கின்ற ஒவ்­வொரு விட­யங்­களும் அர­சாங்­கத்­திற்கே எதிர் விளை­வு­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. புதிய பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்­டத்தை தேவை­யற்­றது என்று ஐக்­கிய தேசிய கட்­சியின் பிரதி தலைவர் சஜித் பிரே­ம­தாஸ தற்­போது குறிப்­பி­டு­வது பய­னற்­றது.
தீவி­ர­வா­தத்தை இல் ­லா­தொ­ழிக்க புதிய பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்­டத்தை உரு­வாக்க வேண்டியதில்லை. 2015.09. 29 ஆம் திகதி நல்­லாட்சி அர­சாங்கம் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வைக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றவே செயற்­ப­டு­கின்­றது. புதிய பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்டம் தேவை­யற்­றது என்று மக்கள் மத்­தியில் குறிப்­பி­டு­வதால் எவ்­வித பயனும் ஏற்­ப­டாது. எந்த இடத்தில் எதிர்ப்­பினை தெரி­விக்க வேண்­டுமோ அவ்­வி­டத்தில் எதிர்ப்­பினை வெளிப்­ப­டுத்த வேண்டும் என்­பதை அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ இனி­யா­வது புரிந்து கொள்ள வேண்டும்.
புதிய பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்­டத்தின் பாரிய விளை­வுகள் தொடர்பில் உரிய தெளி­வில்­லா­ம­லேயே சபை முதல்வர் ல­க் ஷமன் கிரி­யெல்­லவும், ஐக்­கிய தேசிய கட்­சியின் பின்­வ­ரிசை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் போலி­யான கருத்­துக் களை குறிப்­பி­டு­கின்­றார்கள். புதிய பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்­டத்தில் உள்­ள­டக்­கி­யுள்ள ஏற்­பா­டு­க­ளினால் ஏற்­ப­ட­வுள்ள விளை­வு­க­ளையும், நடை­மு­றையில் உள்ள பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் சிறப்­பி­யல்­பு­க­ளையும் ஆளும் தரப்­பி­ன­ருக்கு எடுத்­து­ரைக்க தயார் . அர­சாங்­கத்தின் இய­லா­மை­யினை மூடி மறைக்க சட்­டத்தின் மீது குற்றஞ்சாட்டுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment