விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் அர்னால்ட்டை மர்ம நபர் எட்டி உதைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஹாலிவுட் நடிகர் அர்னால்ட், தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னேஸ்பர்க் பகுதியிலுள்ள சாண்ட்டனில் நடைபெற்று வரும் விளையாட்டு போட்டிகளைப் பார்வையிடச் சென்றார்.
வீரர்களுடன் அர்னால்ட் புகைப்படம் எடுத்துக்கொண்டு அவர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார். இதன்போது மர்ம நபர் ஒருவர் திடீரென்று அவர் முதுகில் எட்டி உதைத்துள்ளார். அங்கிருந்த அர்னால்டின் காவலாளர்கள் அந்த நபரைப் பிடித்துள்ளனர்.
இது குறித்து அர்னால்ட் தெரிவித்ததாவது,
”கூட்டத்தில் தன் மீது யாரோ மோதிவிட்டார் என்று நான் நினைத்தேன். வீடியோவைப் பார்த்த பின்புதான் அந்த நபர் என்னைத் தாக்கினார் என்பது தெரிந்தது. தாக்குதல் நடத்திய நபர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டாம் என்றும் அதிகாரிகளிடம் கூறினேன்” என்றார்.
0 comments:
Post a Comment