பாரவூர்தியும் காரும் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் புதுச்சேரி அருகில் நடந்துள்ளது. சென்னையிலிருந்து புதுச்சேரி நோக்கி வந்த பாரவூர்தியும் எதிரே வந்த காரும் நேருக்கு நேர் மோதியதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில், காரில் பயணம் செய்த ஸ்ரீதரன், அவருடைய மனைவி ஸ்ரீதேவி ஆகியோர் உயிரிழந்தனர்.
காயமடைந்த பாரவூர்தியின் சாரதி உள்ளிட்ட ஐவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
விபத்துக்கான காரணம் குறித்து, கோட்டக்குப்பம் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
0 comments:
Post a Comment