தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் அமைப்பாளர் எனக் கருதப்படுபவரின் வீட்டில் இன்றையதினம் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்ட அமைப்பாளராகக் கருதப்படும் சியாம் என்பவர் தங்கியிருந்த வாடகை வீட்டிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அரச புலனாய்வுப் பிரிவின் அம்பாறை மாவட்ட அலுவலக அதிகாரிகள், தடயவியல் பொலிஸார் இணைந்து தேடுதலை மேற்கொண்டனர்.
வீட்டில் அமைந்துள்ள கிணறு இரு மணி நேரமாக இறைக்கப்பட்டு அதிலிருந்து பல சந்தேகத்துக்கிடமான பொருள்களும் மீட்கப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment