வைத்தியர் சிஹாப்டின் மொஹமட் சபி மேற்கொண்ட சத்திரசிகிச்சை காரணமாக தாய்மார்கள் யாரேனும் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருப்பார்களாயின் அவர்களுக்கு அரசாங்கம் உடனடியாக நஷ்டயீடு வழங்க வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மஹிந்த ராஜபக்ஷ இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“குருநாகல் வைத்தியசாலையில் மகப்பேற்று பிரிவில் பணியாற்றிய வைத்தியர் சிஹாப்டின் மொஹமட் சபிக்கு எதிராக 16 பெண்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஆகையால் இவ்விடயத்தில் துரித விசாரணைகள் மிகவும் அவசியமாகும். மேலும் வைத்தியரின் சத்திரசிகிச்சையினால் தாய்மார்கள் பாதிக்கப்பட்டுள்ளார்களா? என்பதை உடனடியாக கண்டறிந்து அவர்களுக்கான நஷ்டயீட்டை வழங்குவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும்” என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment