பிளாஸ்டிக் கழிவுகள் எந்த நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டதோ அங்கேயே அனுப்ப மலேசிய அரசு முடிவு செய்துள்ளது.
உலகளவில் சீனாவுக்கு பின்னர் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாக சேரும் நாடாக மலேசியா இருக்கிறது.
இந்த நிலையில் அந்த நாட்டில் சேர்ந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளில், 3 ஆயிரம் டன்னுக்கும் அதிகமான கழிவுகள் எந்தெந்த நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டதோ அங்கேயே திருப்பி அனுப்ப மலேசிய அரசு முடிவு செய்துள்ளது.
அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா என 14 நாடுகளுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் திருப்பி அனுப்பப்படள்ளன. அந்த நாட்டில், அங்கீகாரம் இல்லாத பிளாஸ்டிக் மறுசுழற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருவதால் கழிவுகள் அதிகம் சேருவதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment