கிணற்றில் வீழ்ந்தது குட்டி யானை மீட்பு பணி ஆரம்பம்

பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து உயிருக்குப் போராடும் யானையை மீட்கும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.


வவுனியா வடக்கு கனகராஜன்குளம் பெரியகுளம் பகுதியிலுள்ள பாவனையற்ற கிணற்றில் யானைக்குட்டி ஒன்று நேற்று இரவு தவறி வீழ்ந்துள்ளது.


இதையடுத்து அருகிலிருந்தவர்களின் உதவியுடன் கிணற்றிலிருந்த பெருமளவு தண்ணீர் வெளியே இறைக்கப்பட்டு ஜே.சி.பி, பாரம்தூக்கியின் உதவியுடன் யானைக்குட்டியை மீட்கும் நடவடிக்கை இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.


கனகராஜன்குளம் பொலிஸார் மற்றும் வவுனியா, கிளிநொச்சியை சேர்ந்த வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள், கிராம மக்கள் ஒன்றிணைந்து  இதனை முன்னெடுத்து வருகின்றனர்.











Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment