ஐ.சி.சி. உலகக் கோப்பை போட்டிகள் ஆரம்பமாவதை முன்னிட்டு கூகுள் டூடுள் வெளியிட்டுள்ளது.
ஐ.சி.சி. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் இன்று கோலாகலமாக ஆரம்பிக்கவுள்ளது. 10 அணிகள் பங்கேற்கவுள்ள இந்தத் தொடரில் 48 போட்டிகள் நடைபெறவுள்ளன.
இங்கிலாந்து சார்பில் நடத்தப்படும் ஐ.சி.சி. உலகக் கோப்பை போட்டிகளை காண உலகம் முழுவதும் இரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
இன்று நடைபெறும் முதல் போட்டியில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதுகின்றன.
இதனை முன்னிட்டு வண்ணமிகு அனிமேஷன் காட்சிகளுடன் கூகுள் டூடுள் வெளியிட்டுள்ளது.
0 comments:
Post a Comment