பாகுபலி படத்தின் இரு பாகங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு பிரபாஸ் நடித்து வரும் படம் சுஜித் இயக்கும் 'சாஹோ'.
அபுதாபி மற்றும் மும்பையில் படமாக்கப்பட்ட காட்சிகள் சிலவற்றை தற்போது, ஐதராபாத்தில் படமாக்க திட்டமிட்டு வருகிறார்களாம்.
இந்தப் படத்தின் காட்சிகளை படப்பிடிப்பு முடிந்ததும் அவ்வப்போது திரையிட்டுப் பார்த்து வருகிறார்களாம். அப்படி பார்த்த விதத்தில் சில காட்சிகளைப் படமாக்கிய விதம் பிரபாஸுக்குப் பிடிக்கவில்லையாம்.
அதனால், படத்தின் தரத்தில் எந்த வித குறையும் இருக்கக் கூடாது என பிரபாஸ் சொல்லியிருக்கிறாராம்.
அதனால் அவற்றை ரிஷுட் செய்ய வேண்டும் என அவர் சொல்லியிருக்கிறாராம்.
எனவே, செலவைப் பற்றிக் கவலைப்படாமல் மீண்டும் படப்பிடிப்பு நடத்த உள்ளார்கள் என்கிறது டோலிவுட் வட்டாரம்.
'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு பிரபாஸுக்கு உலக அளவில் ரசிகர்கள் கிடைத்துள்ளனர்.
0 comments:
Post a Comment