இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்

பத்திரிகைகளில் எழுத இயலாத அளவுக்கு கோரமாக வன்புணர்வு செய்யப்பட்டு, சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட ஒரு இளம்பெண்ணின் கொலையாளிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கனடாவில் நடந்த இந்தச் சம்பவம், அவரது பெற்றோரை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

2010 ஆம் ஆண்டு, Kimberly Proctor, 18 வயதாக இருக்கும்போது அவரது வகுப்புத் தோழர்களால் கொடூரமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

2011 ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி, கொலை, சித்திரவதை, வன்புணர்வுக் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட Kruse Wellwood (16) மற்றும் Cameron Moffat (17) ஆகியோருக்கு 10 ஆண்டுகளுக்கு வெளிவர இயலாத ஆயுள் தண்டனை நிதிமன்றால் வழங்கப்பட்டது. 

ஆனால் தற்போது அவர்கள் பகல் நேர பிணையில் விடுவிக்கப்படவுள்ளதோடு, அடுத்த ஆண்டு ஜூனில் முழு பிணையில் விடுவிக்கப்படவுள்ளதாகத் தேசிய ஜாமீன் போர்டு தெரிவித்துள்ளது.

இதனால் Kimberlyயின் பெற்றோர் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கொலையாளிக்கு பிணை வழங்குவதன் மூலம், தாங்கள் கொலையாளியால் தாக்கப்படுவதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பை நீதி அமைப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக Kimberlyயின் தந்தை வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

இந்த வலி ஒருபோதும் எங்களை விட்டுப் போகாது என்று கூறியுள்ள அவர், எப்படியோ எங்கள் வேதனையை தாங்கிக் கொண்டு வாழ பழகி விட்டோம், ஆனால் கனடாவின் நீதி எங்கள் காயங்கள் ஆறுவதை தடுத்து நிறுத்தியுள்ளது என்கிறார் அவர்.



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment