வெடிகுண்டு புரளி ; மாணவர்கள் எழுவர் கைது

பாடசாலையின் நுழைவாயில் செங்கலை வெடிகுண்டு போல் பொதிசெய்து வைத்த ஏழு மாணவர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

இந்தச் சம்பவம் வெள்ளவாயா குமாரதாச மத்திய மகா வித்தியாலயத்தில் நேற்று நடந்துள்ளதுள்ளது 

இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர் உள்ளிட்ட கிராமவாசிகள் மத்தியில், பெரும் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.

வித்தியாலயத்தின் நுழைவாயில் அருகே மர்மப் பொருள் ஒன்று இருப்பதாக, வித்தியாலய அதிபர், வெள்ளவாயா பொலிஸாருக்கு அறிவித்தார். 

பொலிஸார் மற்றும் குண்டு செயலிழக்கும் பிரிவினர் இணைந்து  வித்தியாலய வளவு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட வகுப்பறைகளையும் சோதனையிட்டனர். இச் சோதனையில் எந்தவொரு வெடிப்பொருளும் அகப்படவில்லை.

இதையடுத்து, வித்தியாலய நுழைவாயிலருகே காணப்பட்ட பொதியை, தூரத்திலிருந்தவாரே, இராணுவத்தினர் பரிசோதனைகளை மேற்கெண்டிருந்தனர். 

இப் பரிசோதனையின் அடிப்படையில், குறித்த பொதியில் வெடிப்பொருள்கள் எதுவுமில்லையென்று, ஊர்ஜிதம் செய்த இராணுவத்தினர் சூட்சுமமான முறையில், அப்பொதியை சோதனையிட்ட போது செங்கல் ஒன்று சுற்றப்பட்டு, குண்டு போன்று பொதி செய்யப்படிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டது.

செங்கலை பொதி செய்த கடதாசி, குறிப்பிட்ட வித்தியாலய கற்கை திட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டதென்றும், அக் கற்கை திட்டம் ஆண்டு 11ஆம் வகுப்பிற்குரியதென்றும் கண்டுபிடித்த பொலிஸார், கடதாசியை குறிப்பிட்ட வகுப்பிற்கு எடுத்துச் சென்று பரிசீலனை மற்றும் புலன் விசாரணையில் ஈடுபட்டனர். 

இதன்போது, குறிப்பிட்ட வகுப்பின் மாணவர்கள் சிலரே, குண்டு புரளியைக் கிளப்பியிருந்தமை தெரியவந்துள்ளது. அத்துடன், அவ் வகுப்பின் ஏழு மாணவர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட இம் மாணவர்கள் ஏழு பேரும், விசாரணையின் பின்னர், வெள்ளவாயா நீதவான்  நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவரென்று, வெள்ளவாயா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சி.பி. குணசேக்கர தெரிவித்துள்ளார். 


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment