நாட்டில் தற்போது தடை செய்யப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்களுக்கு இலங்கை புலனாய்வுப் பிரிவு ஊதியம் வழங்கி வந்துள்ளது. இவ்வாறு அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,
தேசிய தவ்ஹீத் ஜமாத் மற்றும் அதன் தாக்குதல் திட்டங்கள் தொடர்பாக முன்னதாக வழங்கப்பட்ட எச்சரிக்கைகளைப் பாதுகாப்புப் பிரிவுகள் புறக்கணித்திருந்தன.
மட்டக்களப்பு- வவுணதீவு சோதனைச் சாவடியில் 2018 நவம்பர் 30 ஆம் திகதி இரு பொலிஸார் கொலை செய்யப்பட்ட தாக்குதலை குறைந்தது 4 இராணுவ அதிகாரிகள் வழிநடத்தியுள்ளனர்.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை அடுத்து, கல்முனையில் கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கி, வவுணதீவுத் தாக்குதலின் பின்னர் எடுத்துச் செல்லப்பட்டதாகும்.
தற்போது தடை செய்யப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் குறைந்தது 26 உறுப்பினர்கள் புலனாய்வுப் பிரிவின் ஊதியப் பட்டியலில் இருந்துள்ளனர். இவர்கள் கோத்தாபய ராஜபக்சவுடன் தொடர்பில் இருந்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள அப்துல் ராசிக் என்ற தேசிய தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர் புலனாய்வுப் பிரிவிடம் ஊதியம் பெறுபவர்.-என்றார்.
0 comments:
Post a Comment