பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்று விடுதலை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞானசார தேரரை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஒப்புதல் தெரிவித்துள்ளதுடன் அவரது விடுதலை தொடர்பிலான ஆவணங்களுக்கு நேற்று மாலை ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று மாலை 3 மணிக்கு ஞானசார தேரர் விடுதலை செய்யப்படுவார் எனவும் குறித்த வேளையில் அனைவரும் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகாமையில் ஒன்றுகூடுமாறும் பொதுபல சேனா அமைப்பின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment