எனக்காக எதையும் வேண்டி கோவிலுக்குச் செல்வதில்லை இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் மோடி.
கேதார்நாத்தில் கோவிலுக்குச் சென்று விட்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,
ஆன்மிக ஒளியூட்டப்பட்ட புனித தலங்களுக்கு செல்வதை பெருமையாக கருதுகிறேன். பிரார்த்தனையின்போது நான் எதுவும் கேட்பதில்லை என்றார்.
இதன்போது குறுக்கிட்ட செய்தியாளர் ஒருவர், தேர்தல் வெற்றிக்காககூட பிரார்த்திக்கவில்லையா என கேட்டார்.
இல்லை என பதிலளித்த பிரதமர், எல்லாவற்றையும் இறைவன் நமக்கு வழங்கியிருப்பதாக தாம் நம்புவதாகக் குறிப்பிட்டார்.
நாட்டு மக்கள் அனைவருக்கும் கடவுளின் ஆசிகள் இருக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. மக்கள் அனைவரும் நாட்டைச் சுற்றிப் பார்க்க வேண்டும். வெளிநாடுகளுக்குச் செல்வது தவறில்லை என்றாலும், உள்நாட்டிலும் வெவ்வேறு இடங்களுக்கு மக்கள் பயணம் செய்ய வேண்டும்- என்றார்.
0 comments:
Post a Comment