அரியானா மாநிலத்தில் பொலிஸார் பெண்ணொருவரை சுற்றி வளைத்து தாக்கியது தொடர்பான காணொளி ஒன்று இணையதளத்தில் பரவியுள்ளது.
இதனையடுத்து 5 பொலிஸார் பணி நீக்கம் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பரிதாபாத்தில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் இந்தச் சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
சம்பவத்துடன் தொடர்புடைய பெண் முறைப்பாடு அளிக்காததால் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்ததாக ஹரியானா பொலிஸார் கூறுகின்றனர்.
இந்த நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து மாநில மகளிர் ஆணையம் பொலிஸாரின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய தலைமைக் காவலர்களான பல்தேவ், ரோகித், பொலிஸ் சிறப்பு அதிகாரிகள் கிரிஷண், ஹர்பால், தினேஷ் ஆகியோர் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment