அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப்க்கும் ஜப்பானியப் பிரதமர் ஷின்ஸோ அபேயுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று நடைபெறவுள்ள குறித்த பேச்சுவார்த்தையில் வர்த்தகம், வடகொரியா மற்றும் பிராந்திய விவகாரங்கள் உள்ளிட்டவை குறித்து அவதானம் செலுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜப்பானுக்கு 4 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள டொனால் ட்ரம்ப்க்கு டோக்கியோவிலுள்ள ஜப்பானியப் பேரரசரின் அரண்மனையில் அதிகாரபூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் புதிய பேரரசர் நருஹிட்டோவைச் சந்திக்கும் முதல் வெளிநாட்டுத் தலைவர் என்ற பெருமையையும் டொனால் ட்ரம்ப் பெற்றுள்ளார்.
இதேவேளை டொனால் ட்ரம்வும் அவரது மனைவியும் இன்று மாலை ஜப்பானிய அரச தம்பதி அளிக்கும் விருந்தில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment