நூற்றுக்கணக்கான போலி பேஸ்புக் கணக்குகள் முடக்கம்

இஸ்ரேலிய நிறுவனமொன்று  உருவாக்கிய ஆயிரக்கணக்கான போலி பேஸ்புக் மற்றும் இஸ்டகிராம்  கணக்குகளை பேஸ்புக் நிறுவனம் அகற்றியுள்ளது.

பேஸ்புக் நிறுவனம் நூற்றுக்கணக்கான போலி சமூகவலைத்தள கணக்குகளை நீக்கியுள்ளதோடு இதற்கு காரணமான ஆபிக்காவை இலக்கு வைத்த  இஸ்ரேலிய நிறுவனங்களின் "ஒருங்கிணைந்த நம்பகத்தன்மையற்ற  நடத்தைகளையும்" தடை செய்துள்ளது. 

இந்த  போலி கணக்குகளில், அரசியல் செய்திகள் மற்றும்  பல்வேறு நாடுகளில் இடம்பெறும் தேர்தல்கள் குறித்தும் அடுக்கடி பதிவிடப்பட்டுள்ளதாம்.

பேஸ்புக் நிறுவனம் தவறான  தகவல்கள் பகிரப்படுவதை முறியடிப்பதில் தவறியமையால் பல்வேறு விமர்சனங்களுக்கு முகம் கொடுத்துள்ளது.

 இதன் காரணமாக டொனால் ட்ரம்ப்  அமெரிக்க ஜனாதிபதியான பின்னர்  2016 ஆம் ஆண்டு பேஸ்புக் நிறுவனம் போலி கணக்குகளை சோதனை செய்யும் திட்டத்தை அமுல்படுத்தியது.

இன்று 265 பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள், பேஸ்புக் பக்கங்கள், குழுக்கள் மற்றும் நிகழ்வுகளில் ஒருங்கிணைந்த நம்பகத்தன்மையற்ற நடத்தை சார்ந்த செயல்பாடுகளை அகற்றியுள்ளோம் என பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது.

இஸ்ரேலில் உருவாக்கிய போலி கணக்குகள், நைஜீரியா, செனகல், டோகோ, அங்கோலா,நைஜர் மற்றும் டினுசியா போன்ற முதன்மையான இலக்காகக் கொண்டிருந்ததோடு இலத்தீன் அமெரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் சில நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்தியுள்ளது.

இந்த நெட்வேர்க்கு பின்னால் உள்ளவர்கள் போலி கணக்குகளில்  பேஸ்புக் பக்கத்தை உருவாக்கி தகவல்களை பரப்பி பேஸ்புக்கில் பயன்பாட்டாளரின் தொகையை அதிகரித்துள்ளார்கள்.

இவர்கள் தங்களை உள்ளூர்வாசிகளாகவும்,செய்தி நிறுவனங்களாகவும்  பிரதிநிதித்துவப்படுத்திஅரசியல்வாதிகள்  பற்றி  கசிந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்கள் என பேஸ்புக் சைபர்பாதுகாப்பு கொள்கை தலைவர் (head of cybersecurity policy) கூறியுள்ளார்.

இச்சம்பவம் குறித்த விசாரணையில் இஸ்ரேலிய நிறுவனம் ஆர்க்கிமிடஸ் குழுவிற்கு தொடர்பு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது என மேலும் தெரிவித்துள்ளார். 


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment