அண்மைய நாட்களாக இடம்பெறுகின்ற வன்முறைகள் 1983 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அரச பயங்கரவாதத்தை ஞாபகப்படுத்துவதாக வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கை, ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் புத்திஜீவிகளும் நியாயமான அரசியல்வாதிகளும் சமயோசிதமாக காய்களை நகர்த்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் மக்களின் மீது இன அழிப்பு யுத்தத்தை மேற்கொண்டவர்களின் பார்வை தற்போது முஸ்லிம் சகோதரர்களின் மீது திரும்பியிருப்பதாகத் தென்படுகிறது.
உயிர்த்தஞாயிறு தற்கொலைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு பலநாட்கள் கடந்துள்ள நிலையில் முஸ்லிம் மக்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள வன்முறைகளின் பின்னணியை ஆராய்ந்து பார்க்கும் போது இது நன்குதிட்டமிட்ட தொடர் நடவடிக்கை ஒன்றின் அங்கம் என்பதை எடுத்துக் காட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment