டுவிட்டர் வலைத்தளம் இலங்கையில் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களின் ஊடாக தவறான மற்றும் இனங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்தும் வகையில் பகிரப்படும் கருத்துக்களை தவிர்ப்பதற்காகவே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முகநூல், வட்ஸ் அப், வைபர் மற்றும் யூடியூப் உள்ளிட்ட மேலும் சில சமூக வலைத்தளங்களும் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சமூக வலைத்தளங்களை கண்காணிக்க விசேட பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்கள் ஊடாக போலியானதும், இன முறுகல் மற்றும் இனங்களுக்கிடையில் குழப்பம் ஏற்படுத்தும் வகையிலான பிரசாரங்களை முன்னெடுப்போர் தொடர்பாக ஆராயும் வகையிலேயே இந்த பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பிரிவு பொலிஸ் தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல்
முகவரிக்க அனுப்பிவையுங்கள்.
நன்றி
0 comments:
Post a Comment