பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் புத்தளம் மாரவில நகரத்தில் நடந்துள்ளது.
மாரவில பொலிஸ் அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சிலாபம் – முகுனுவட்டன பிரதேசத்தைச் சேர்ந்த அஜித் பிரசன்ன (வயது-31) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
மாரவில நகரத்தில் நேற்று இரவு பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது அவர்களில் ஒருவர் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் அதனால் பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காயம் அடைந்த இளைஞன் மாரவில வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
0 comments:
Post a Comment