முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைக் கடைப்பிடிக்க தமிழ் மக்களுக்கு முழுமையான சுதந்திரமும் உரிமையும் உண்டு. அவர்களால் மேற்கொள்ளப்படும் நினைவேந்தலுக்கு இராணுவம் எவ்வித இடையூறும் கொடுக்காது இவ்வாறு தெரிவித்துள்ளார் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க.
சமாதானத்தின் தசாப்த நிறைவு தினம் என்ற பெயரில் போர் வெற்றிக் கொண்டாட்டங்கள் இந்த முறையும் இராணுவத்தினாரால் முன்னெடுக்கப்படவுள்ளமையை முன்னிட்டு கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,
இலங்கையில் நடைமுறையிலுள்ள சட்டவிதிகளுக்கு உட்பட்டு, நினைவு தினத்தைக் கடைப்பிடிப்பதற்கான உரிமை அனைவருக்கும் காணப்படுகிறது. இலங்கையில் அவசரகால சட்டம் நடைமுறையில் உள்ள தருணத்தில், இவ்வாறான நினைவு தின நிகழ்வுகளை நடத்துகின்றமை சர்ச்சைக்குரிய விடயம் என்று பேசப்படுகின்றது.
உண்மையில் அவசரகால சட்டமும், நினைவு தின கடைப்பிடிப்பும் இருவேறு விடயங்கள். நினைவு தினத்தை உரிய விதிமுறைகளின் கீழ் முன்னெடுக்கலாம் என்றார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர்:
இலங்கையில் மற்றுமொரு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படுவதற்கான சாத்திய கூறுகள் கிடையாது. பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு, கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. புத்தளம் நாத்தாண்டி துன்மோதர பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் ராணுவத்திற்கு எதுவித தொடர்பும் கிடையாது-என்றார்.
0 comments:
Post a Comment