ஓரினச் சேர்க்கையாளர்கள் சட்டப்படி திருமணம் செய்து கொள்ள தாய்வான் அரசு அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்வது தொடர்பிலான வழக்கு தாய்வான் உயர் நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் தீர்ப்பில், 2019 மே மாதம் 24 ஆம் திகதிக்கும், அரசு இது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சட்ட திருத்த வரைவு நாடாளுமன்றில் கொண்டுவரப்பட்டது. வலது சாரி உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் சில மாற்றங்களுடன் கடைசி நேர பரபரப்புடன் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
மே 24 ஆம் திகதிக்குப் பின்னர் ஓரினச் சேர்க்கையாளர்கள் தாய்வானில் திருமணம் செய்து கொள்ள வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு அங்கீகாரம் கொடுத்த முதல் ஆசிய நாடு என்ற பெருமையையும் பெற்றுள்ளது தாய்வான்.
ஓரினச் சேர்க்கையாளர்கள் சமூகத்தில் தாய்வான் அரசின் இந்த சட்ட வரைவுக்கு வரவேற்பும் பாராட்டும் குவிந்து வருகிறது.
0 comments:
Post a Comment