ஃபேஸ்புக் நிறுவனம் தனக்கென சொந்தமாக பிட்காயின் உருவாக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை கொண்டு ஃபேஸ்புக்கில் க்ரிப்டோகரென்சி சார்ந்த பணப்பரிமாற்றங்களை செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வெளியாகியிருக்கும் தகவல்களில், சொந்தமாக பிட்காயின் உருவாக்குவதற்கென ஃபேஸ்புக் நிறுவனம் பல்வேறு நிதி நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் வணிகர்களை பணியமர்த்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. க்ரிப்டோகரென்சி சார்ந்த பேமண்ட் முறையை கொண்டு பிட்காயினுக்கு இணையான டிஜிட்டல் காயின்களை பரிமாற்றங்களுக்கு பயன்படுத்த வேண்டும்.
ஃபேஸ்புக் தன்பங்கிற்கு பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் சக்தியை முடிந்தளவு அதிகமாக பயன்படுத்திக் கொள்ளும் வழிகளை கண்டறிந்து வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக ஃபேஸ்புக் நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் சூக்கர்பர்க் பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் தனக்கு விருப்பம் இருப்பதாகவே தெரிவித்திருந்தார்.
மீண்டும் பிளாக்செயின் ஆத்தின்டிகேஷன் வழங்குவது பற்றி சிந்தித்து வருகிறேன். இதை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பது பற்றி இதுவரை எவ்வித திட்டமும் இல்லை. எனினும், இதன்மூலம் பல்வேறு சேவைகளை இயக்குவதற்கான வசதியை வழங்க முடியும் என சூக்கர்பர்க் தெரிவித்தார்.
பயனர்கள் மூன்றாம் தரப்பு செயலிகளுக்கு டேட்டாவை இயக்க அனுமதியளிக்கும் போது பிளாக்செயின் அவர்களுக்கு அதிகளவு சுதந்திரத்தை வழங்கும். ஃபேஸ்புக்கில் புதிதாக துவங்கப்பட்ட பிளாக்செயின் பிரிவின் பொறியியல் பிரிவுக்கான தலைவராக எவான் செங் நியமிக்கப்பட்டார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment