பாடசாலையில் இடம்பெறும் விளையாட்டுப் பயிற்சிகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
மாணவர்களின் பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்தில்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சின் செயலர் எம். எம். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது,
பாடசாலைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதன் பின்னர் விளையாட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ள முடியும் இதேவேளை, பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், 6 ஆம் தரத்திற்கு மேலுள்ள வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் மாணவர்களின் வருகை நூற்றுக்கு 5 வீதமாக காணப்படுகிறது-என்றார்.
0 comments:
Post a Comment