உடல் கட்டுக் கோப்பு ; தீவிர பயிற்சியில் அமலாபால்

இயக்குநர் விஜய்யை காதலித்துத் திருமணம் செய்து கொண்ட நடிகை அமலாபால் பின் விவாகரத்தும் பெற்று விட்டார். 

இதையடுத்து, சினிமாவில் நடிப்பதில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்தார் அமலா. 

இதேவேளை, தனது உடலை கட்டுக் கோப்பாக வைக்க முடிவெடுத்துள்ளாராம். இதற்கு தீவிர உடல் பயிற்சியும் செய்து வருகிறார். சமூக வலைத் தளங்களில், தன் கவர்ச்சிப் படங்களை அடிக்கடி வெளியிடும் அமலாபால், இந்த கட்டுக்கோப்பான உடலுக்கு காரணம் - யோகா பயிற்சி என்றும் கூறியுள்ளார்.

அவ்வப்போது, ஒரு சில யோகாசனங்கள் செய்வதை படமாக வெளியிட்டு வந்த அமலாபால், தற்போது தனது குருஜியுடன் யோகா செய்யும் படத்தை, இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார்.

தற்போது ஆடை, அதோ அந்த பறவை போன்ற படங்களில் நடித்து வருகிறார். 


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment