கள்ளச்சாராயம் அருந்தி பன்னிருவர் பலியான சம்பவத்தில், பிரதான குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தத் துயரச் சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில் நடந்துள்ளது.
மதுக்கடை ஒன்றில் கள்ளச்சாராயம் அருந்திய ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்களில், சிலருக்கு பார்வை இழப்பு ஏற்பட்ட நிலையில், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே சம்பவத்தில் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் பப்பு ஜெய்ஸ்வால் என்பவரை, காலில் துப்பாக்கியால் சுட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
0 comments:
Post a Comment