இந்தியா மற்றும் இலங்கையைச் சார்ந்த புனித யோசவ்வாஸ் கன்னியர்
சபையைச் சார்ந்த 12 கன்னியாஸ்திரிகளுக்கு நித்திய வாக்குத்தத்தம் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
கற்பு, ஏழ்மை, கீழ்படிதல் என்னும் துறவற வாழ்வுக்கான நித்திய வாக்குத்தத்தம் வழங்கும் இந்த நிகழ்வு, மன்னார், பேசாலை புனித.வெற்றிநாயகி ஆலயத்தில் இன்று காலை நடைபெற்றது.
இதில் கலந்து கொள்வதற்காக மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் வருகை தந்திருந்தார்.
இதில் கலந்து கொள்வதற்காக பேசாலை புனித வெற்றிநாயகி ஆலயத்துக்கு வருகை தந்த அனைவரும் ஆலய வளாகத்துக்குள் செல்லும் முன் பாதுகாப்புப் படையினரால் கடும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
0 comments:
Post a Comment