கேன்ஸ் பட விழாவின் நடுவர் குழுவில் இடம் பெற்றிருந்த ஹாலிவுட் நடிகை எல்லி பேனிங் (வயது 21) கலந்துகொண்டார். விருந்து நடந்து கொண்டிருந்த போது திடீரென அவர் மயங்கி அருகில் கிடந்த இருக்கையில் சரிந்தார். இதனால் விருந்து நிகழ்ச்சி உடனடியாக நிறுத்தப்பட்டது. பெரும் பரபரப்பும் ஏற்பட்டது.
அப்போது அருகில் கிடந்த மற்றொரு இருக்கையில் அமர்ந்திருந்த ஹாலிவுட் நடிகர் காலின் பர்த், அவருக்கு உதவினார்.
உடனடியாக எல்லி பேனிங் சிகிச்சைக்காக அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார். முதலுதவிக்கு பின்னர் அவர் குணம் அடைந்தார்.
இதையொட்டி சமூக வலைத்தளம் ஒன்றில் குறிப்பிட்ட எல்லி பேனிங், தற்போது நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment