உலகக்கோப்பை தொடரை எந்த அணி வெல்லும் என்பது குறித்து, வங்கதேச கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் கருத்து தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை-2019 தொடர் இங்கிலாந்தில் ஆரம்பிக்க இன்னும் ஒரு வாரமே உள்ளது. இந்தத் தொடரை வெல்லும் அணிகள் குறித்து கணிப்புகள் நிலவி வருகின்றன.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளில் ஒன்று கோப்பையை கைப்பற்றும் என பெரும்பான்மையான கருத்துக்கள் நிலவுகின்றன. இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் பலர் உள்ளதால், அவற்றில் ஒரு அணி எளிதாகக் கோப்பையை வெல்லும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், வங்கதேச அணியின் மூத்த வீரரான ஷகிப் அல் ஹசன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,
‘இந்தியா, இங்கிலாந்து உலகக்கோப்பையை வெல்லும் தகுதி உள்ள அணியில் ஒன்றாக இருக்கலாம். ஆனால், அது மட்டுமே வெற்றியை கொடுத்து விடாது.
நீங்கள் கடினமான அடிகளைக் கடந்துதான், உலகக்கோப்பை போன்ற தொடரை வெல்ல முடியும். வங்கதேச அணி இம் முறை வெற்றி பெற வேண்டும் என்பதே என் விருப்பம்’ எனத் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment