நாட்டில் பலர் இன்னமும் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டு உள்ளனர் என்ற தகவல் எமக்கு கிடைத்துள்ளது. ஆகவே அது குறித்து தேடுதல் பணிகள் பாதுகாப்பு படைகளினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார, பயங்கரவாத ஊடுருவல் இன்னமும் பூரணமாக தடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.
நாட்டின் பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அதேபோல் கைதுசெய்யப்பட்டவர்களின் விசாரணைகளின் போது குற்றங்களுடன் தொடர்பில் இல்லாத நபர்களை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.
0 comments:
Post a Comment