நாடு முழுவதும் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் நேற்றிரவு 9 மணி முதல் இன்று அதிகாலை 4 மணிவரையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டிருந்தது.
அத்தோடு கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் நேற்றிரவு 7 மணி முதல் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம், இன்று அதிகாலை 6 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.
வடமேல் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்களையடுத்து நேற்று முன்தினம் இரவு வடமேல் மாகாணம் முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் பதிவாகக்கூடுமென்பதால் நாடு முழுவதிலும் இரவு வேளைகளில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment