ஜனாதிபதியின் விசேட மன்னிப்பு பெற்று விடுதலையான பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் தலைமையில் இன்று (26) மாலை கண்டி நகரில் விசேட பூஜை (அதிஸ்டான பூஜை) வழிபாட்டு நிகழ்வொன்று இடம்பெறவுள்ளதாக அவ்வமைப்பு அறிவித்துள்ளது.
விடுதலையின் பின்னர் கண்டி தலதா மாளிகைக்கு சென்று வழிபட்டதன் பின்னர் இந்த அதிஸ்டான பூஜை நிகழ்வு இடம்பெறவுள்ளதாக அவ்வமைப்பின் தேசிய அமைப்பாளர் விதாரந்தெனிய நந்த தேரர் தெரிவித்துள்ளார்.
இந்த அதிஸ்டான பூஜை வழிபாட்டில் கலந்துகொள்ளவுள்ளவர்கள் இன்று மாலை தலதா மாளிகைக்கு அருகில் கூடுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment