கடந்த வருடங்களைப் போன்று இந்த வருடமும் வெசாக் காலத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
வெசாக் தினங்களில் கொழும்பு நகரிற்கு வருகை தரும் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெருக்கடிகளை கையாள்வதற்காக பொலிஸ் அதிகாரிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.
இக்காலப்பகுதியில் சிவில் பொலிஸ் பிரிவுடன் தொடர்கொண்டு உரிய பிரதேசத்தை உள்ளடக்கியதாக மத அனுஷ்டானங்களை ஒழுங்கு செய்து கொள்ளுமாறு, நாடு முழுவதிலுமுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment