இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஒருவர் கூட்டணியின் பொது வேட்பாளராக வருவார் எனவும், அவரை வெற்றி பெறச் செய்யும் நடவடிக்கையில் தாம் உள்ளோம் எனவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
சற்று முன்னர் அரச தொலைக்காட்சியொன்றில் நேரடி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் மூன்று பதவிகளுக்குரிய நபர்கள் தீர்மானிக்கப்பட வேண்டும். ஜனாதிபதி வேட்பாளர், பிரதமர் பதவிக்குரியவர், ஐ.தே.கட்சியின் தலைவர் பதவி ஆகிய பதவிகளுக்கு ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, கரு ஜயசூரிய ஆகிய மூவரில் இருந்து நியமனங்கள் இடம்பெறவேண்டும்.
இனவாதத்துக்கு எதிராக வாக்களிப்பவர்கள் ஐ.தே.கட்சி தலைமையிலான கூட்டணியைத் தெரிவு செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
0 comments:
Post a Comment