முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் பேரெழுச்சியுடன் நடந்து கொண்டிருக்கின்றன.
நினைவேந்தலிற்கு தடையிருக்காதென பாதுகாப்பு தரப்பு அறிவித்தலை போலவே, நிகழ்வு மிக அமைதியாக நடந்து கொண்டிருக்கிறது.
நினைவேந்தலில் பொதுச்சுடரை மாணவியொருவர் ஏற்றினார். அவரின் பின்னால் துயரமாக கதையொன்று இருக்கிறது.
யுத்தத்தின் இறுதிநாட்களில் வெளியான புகைப்படங்களில் ஒன்று- தாயொருவர் உயிரிழந்திருக்க, அதை அறியாத சிறுமியொருவர் தாயில் பால் பருக முயல்வதை போன்ற புகைப்படம். மனதை உருக்கும் அந்த புகைப்படம் யுத்தத்தின் கோர சாட்சிகளில் ஒன்றாக விளங்குகிறது.
அப்போது ஏதும் அறியாத பச்சிளம் குழந்தையே, இன்று பொதுச்சுடரை ஏற்றினார்.
இன்றைய நிகழ்வில் வடக்கு முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், மாவை சேனாதிராசா, த.சித்தார்த்தன், சி.சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன், யாழ் மாநகரசபை மேயர் இ.ஆனோல்ட் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment