இந்தியாவின் பந்து வீச்சு பலம் வாய்ந்தது இவ்வாறு தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான இயன் சேப்பல்.
இந்திய அணியில் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, குல்தீப் யாதவ், சாஹல், ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர், ஜடேஜா ஆகிய பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.
இதில் பும்ரா ஒருநாள் மற்றும் ரி20 கிரிக்கெட்டில் அபாரமாக பந்து வீசி வருகிறார். இந்த சீசனில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்தியாவின் பந்து வீச்சு பலம் வாய்ந்தது என இயன் சேப்பல் தெரிவித்துள்ளார். இது குறித்து இயன் சேப்பல் கூறுகையில்,
உலகக்கோப்பையில் விளையாடும் இந்திய அணியின் பந்து வீச்சு பலம் வாய்ந்ததாக இருக்கிறது. வெவ்வேறு வகையில் பந்து வீசக்கூடிய திறமை வாய்ந்த பவுலர்கள் அந்த அணியில் உள்ளனர்.
வேகப்பந்தில் முகமது ஷமி, பும்ராவும், சுழற்பந்தில் குல்தீப் யாதவும், சாஹலும் நேர்த்தியாக வீசக்கூடியவர்கள்-என்றார்.
0 comments:
Post a Comment