இந்தியாவின் மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில், கனேடியப் பிரதமர் ஜஸ்டீன் ட்ரூட்டோ தன்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.
இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, 343 இடங்களில் முன்னிலை வகித்தது. இதில், 303 இடங்களில் பாஜக மட்டும் தனித்து வெற்றியை உறுதி செய்தது.
வரலாற்று வெற்றியை பெற்றிருக்கும் பாஜகவிற்கு உலகில் இருக்கும் தலைவர்கள் பலர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கனேடியப் பிரதமர் ஜஸ்டீன் வாழ்த்துக் கூறி கருத்துத் தெரிவிக்கையில்,
”மீண்டும் வெற்றி பெற்று இந்தியாவில் ஆட்சி அமைக்கவுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு கனடா அரசின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கனடா வாழ் இந்தியர்களின் வாழ்க்கை மேம்பாடு, கல்வி, வர்த்தகம், முதலீடு, வாழ்க்கை சூழலியல் மாற்றம் போன்ற துறைகளில் மோடியுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்” -என்றார்.
0 comments:
Post a Comment