யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேசத்தில் குறித்த சில இடங்களில் சி.சி.ரி.வி. கமராக்கள் பொருத்தப்படவுள்ளன.
இதற்கான தீர்மானம் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ள நிலையில், மக்களின் பாதுகாப்புக் கருதி குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களைக் கண்டுபிடிக்கக் கூடிய வகையில், கமராக்கள் பொருத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment