புதிய கூட்டணி அமைப்பது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான நான்காம் கட்ட சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று முற்பகல் 10 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
புதிய கூட்டணி அமைக்கும் விடயத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் முன்னதாக 3 தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. இந்த நிலையில் இன்றைய தினம் நான்காம் சுற்று பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.
இரண்டு கட்சிகளுக்கும் இடையில் முன்னதாக இடம்பெற்ற சந்திப்புக்களில் சில இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் அடுத்தக்கட்ட சந்திப்பு இடம்பெறவுள்ளது.
0 comments:
Post a Comment