காங்கிரஸ் கட்சியின் தோல்வியை அடுத்து, காங்கிரஸ் தலைவர்கள் பலரும் தோல்வியைப் பொறுப்பேற்று தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
உத்திரபிரதேஷம், ஜார்கண்ட், மகாராஸ்ரம்,ஒடிசா ஆகிய மாநிலங்களின் தலைவர்களே ராஜினாமா செய்துள்ளனர்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதனை அடுத்து, தோல்வியை பொறுப்பேற்று அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்வதாகத் தகவல்கள் வெளியாகியது.
அதன்பின் கூடிய காரிய அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் தனது ராஜினாமா கடிதத்தை மூத்த நிறுவாகிகளிடம் வழங்கினார். ஆனால் கூட்டத்தில் இருந்த தலைவர்கள் அனைவரும் இதை ஏற்க மறுத்து, அவரை பதவியில் தொடர கேட்டு கொண்டனர்.
பின்னர் அவருக்கு காங்கிரசை நிர்வாகிக்கும் முழு பொறுப்பு வழங்கப்பட்டு பதவி ராஜினாமா திட்டம் தடுக்கப்பட்டது.
இந்த நிலையில் தோல்விக்குப் பொறுப்பேற்று உத்தரபிரதேஷம், ஜார்கண்ட், மகாராஷ்ரம், மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
முன்னதாக, காரிய அமைச்சரவைக் கூட்டத்தில், ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் இந்த தோல்விக்கு கட்சியின் மூத்த தலைவர்களே காரணம் என்று கூறியதாகவும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
0 comments:
Post a Comment