குடலில் மறைத்துக் கடத்தி வந்த கொகைன் பாக்கெட்கள் பிரிந்ததில் பயணி ஒருவர் நடுவானில் உயிரிழந்துள்ளார்.
கொலம்பியா தலைநகர் போகோடாவிலிருந்து டோக்கியோ சென்ற ஏரோமெக்சிகோ விமானத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
இதில் பயணம் செய்த ஜப்பானைச் சேர்ந்த 42 வயது பயணிக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இதனையடுத்து, மெக்சிகோ நகரத்தில் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. அங்கு அந்த நபருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டபோது, அவர் விமானத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.
குறித்த நபரின் குடலில், 2.5 சென்டிமீட்டர் நீளம் கொண்ட 246 கொக்கைன் பைக்கெட்கள் இருந்ததும், அந்த பைக்கெட்களில் சில பிரிந்து, அந்த நபரின் குருதியில் அதிகப்படியான போதைப்பொருள் கலந்ததால் அவர் உயிரிழந்ததும் பரிசோதனையில் தெரியவந்தது.
இதுகுறித்து அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment